» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பிரதான சாலையில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள பேனர்கள்: சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!
ஞாயிறு 5, ஜூலை 2026 9:29:48 AM (IST)

தூத்துக்குடியில் அமைச்சரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று தூத்துக்குடி வருகிறார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பிரதான சாலைகளில் கட்சிக் கொடிகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் ஆங்காங்கே வரவேற்பிற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த டிஜிட்டல் போர்டுகளினால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகப் பெரிய விபத்து மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையின் நடுவே உள்ள உயர் மின்விளக்கு கோபுரங்களின் தூண்களில் விதிகளை மீறி நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் பலத்த காற்று மற்றும் போதிய பிடிமானமின்மை காரணமாக ஆங்காங்கே சாலையின் நடுவே சாய்ந்த வண்ணம் உள்ளன.
இச்சாலை எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் பகுதி என்பதால், சாய்ந்துள்ள பேனர்கள் ஏதேனும் வாகனங்களின் மீது விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, உடனடியாக காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் தலையிட்டு, ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் போர்டுகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியம் காட்டினால் அசம்பாவிதங்கள் நேர வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)



Ajith Singh TJul 5, 2026 - 01:58:30 PM | Posted IP 104.2*****