» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 4, ஜூலை 2026 10:14:03 AM (IST)
தூத்துக்குடியில் பெற்றோருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் இசக்கி மகாராஜன் (17). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு EEE படித்து வந்தார். இசக்கி மகாராஜன் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாததால் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோரிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
நேற்று மதியம் பெற்றோர் சொந்த ஊரான தட்டப்பாறைக்குச் சென்ற நிலையில், மாலையில் தனது தாயைத் தொடர்பு கொண்டு போனில் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கண்ணாடி, பாத்திரங்களை அடித்து உடைத்துவிட்டு, வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மேற்கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் பெற்றோர் போன் செய்தபோது எடுக்காததால், அவர்களது உறவினர் ரகு நேரில் சென்று பார்த்தபோது இசக்கி மகாராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச் சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)



செல்போன்Jul 5, 2026 - 01:46:05 PM | Posted IP 172.7*****