» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது!
வெள்ளி 3, ஜூலை 2026 8:28:46 AM (IST)
கழுகுமலை அருகே இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படம் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம், ஜம்புலிங்கபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சக்திவேல் (29). விவசாயியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கைப்பேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செயலி வழியாக ஆபாசமான படங்களை அனுப்பியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)



காஜிJul 5, 2026 - 01:49:59 PM | Posted IP 162.1*****