» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாயின் உடல்நிலையால் கவலை: மகன் தற்கொலை!
வியாழன் 2, ஜூலை 2026 4:32:34 PM (IST)
தூத்துக்குடியில் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 9-ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் குருசாமி (39). திருமணமாகாத இவர், சாலையில் குப்பைகளைச் சுத்தம் செய்யும் வாகனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது தாய் ராமலட்சுமிக்கு (52) புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், வரும் ஜூலை 12-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இதனால் வெங்கடேசன் குருசாமி கடந்த சில நாட்களாகக் கடுமையான சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்குச் செல்லாமல் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வெங்கடேசன் குருசாமி வீட்டின் மரக்கட்டையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)



நீJul 5, 2026 - 01:49:31 PM | Posted IP 104.2*****