» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தலைமை மதபோதகர் கொலை வழக்கு: சபை ஊழியர் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 7:46:25 AM (IST)

தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சபையின் ஊழியர் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கனகராஜ் (73). இவர் தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சபையின் ஊழியரான குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதை கனகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, டைட்டஸ் மற்றும் உதவி போதகர் ஜான் தாமஸ் (57) ஆகியோர் கனகராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.
இதன்படி, கடந்த 04.10.2016 அன்று டைட்டசின் சகோதரர் அண்டோ (39) மற்றும் நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த ரகு (45) ஆகியோரைத் தூத்துக்குடிக்கு வரவழைத்துள்ளனர். அன்று இரவு சபை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த கனகராஜின் முகத்தில் தலையணையால் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலைக் குளிப்பாட்டி, வேறு உடை அணிவித்து தடயங்களை மறைக்க முயன்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் கனகராஜின் உறவினர் சுதர்சனம் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் உதவி போதகர் ஜான் தாமஸ் இறந்துவிட்டார்.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டைட்டஸ், அண்டோ மற்றும் ரகு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். மேலும், டைட்டசுக்கு 13,500 ரூபாயும், அண்டோவுக்கு 6,000 ரூபாயும், ரகுவுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)



உண்மJun 30, 2026 - 08:45:49 AM | Posted IP 172.7*****