» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வைகோவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஆட்சியரிடம் மக்கள் கூட்டமைப்பு மனு!

திங்கள் 29, ஜூன் 2026 3:33:53 PM (IST)



தூத்துக்குடியில் ஜூலை 2 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வைகோ பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மதிமுக சார்பில் ஜூலை 2 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துப்பறியும் மக்கள் கூட்டமைப்பு' மற்றும் 'தமிழர் விடியல் கட்சி' சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துப்பறியும் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழர் விடியல் கட்சியின் நிறுவனருமான சே.மா.சந்தணராஜ் மற்றும் முகமது அசன் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், கடந்த ஐந்து ஆண்டுகாலத் திமுக ஆட்சியில் மதிமுக தொடர்ந்து கூட்டணியில் பங்கு வகித்து வருகிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தொடர்பாக எவ்விதப் போராட்டங்களையும் முன்னெடுக்காமல் மதிமுக மௌனம் காத்து வந்தது. 

தற்போது திடீரெனத் தூத்துக்குடியில் வைகோ தலைமையில் பொதுக்கூட்டத்தை அறிவித்திருப்பது, தேர்தல் நெருங்கும் சூழலில் தூத்துக்குடி மக்களைத் திசை திருப்பும் நோக்கில் திட்டமிடப்பட்ட செயலாகும். எனவே, சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த மதிமுக பொதுக்கூட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்Jun 30, 2026 - 06:41:07 PM | Posted IP 104.2*****

என்ன தேர்தல் வருது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory