» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி நகரப் பேருந்துகளில் பெயர் மாற்றம் : தமிழ்நாடு இணைப்பு - பொதுமக்கள் வரவேற்பு!
திங்கள் 29, ஜூன் 2026 8:39:06 AM (IST)

தமிழகத்தில் புதிய அரசுப் பேருந்துகளில் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அரசுப் பேருந்துகளில் இருந்த "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்" என்ற பெயரிலிருந்து 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, "அரசுப் போக்குவரத்துக் கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டது. இம்மாற்றத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், பேருந்துகளில் மீண்டும் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்" என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கொள்கை முடிவு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள பேருந்துகளில் பெயர் மாற்றும் பணிகள் தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள் அனைத்திலும் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மண்டலப் பயன்பாட்டிற்காக 50-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த ஒதுக்கீட்டின் கீழ், தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனைக்கு புதிய நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்கள்) வந்து சேர்ந்துள்ளன. இப்பேருந்துகளில் "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி" என்று தமிழ்நாடு பெயர் தெளிவாக இடம் பெற்றுள்ளது.
புதிய பேருந்துகளில் தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், தற்போது இயக்கப்பட்டு வரும் பழைய அரசுப் பேருந்துகள் அனைத்திலும் விடுபட்டுள்ள "தமிழ்நாடு" என்ற வாசகத்தை உடனடியாக இணைக்கத் தேவையான நடவடிக்கைகளைப் போக்குவரத்துத் துறை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
SundarJun 29, 2026 - 10:13:42 PM | Posted IP 104.2*****
போக்குவரத்து கழகங்கள் நஷ்டம் வராம லாபம் கிடைக்க வழி செய்யுங்க முதலில்
TN69Jun 29, 2026 - 10:03:56 PM | Posted IP 104.2*****
தூத்துக்குடி மாநகர பேருந்து 'TN69' என்று மாத்தினா இன்னும் நல்லா இருக்கும், அல்லது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி ன்னு வந்தா டபுள் சந்தோசம்; தூத்துக்குடி மாநகராட்சி 20 வருசம் நெருங்கும் நிலையில் என்னதான் செய்கிறீர்களோ???!!!! இதனை முன்னெக்காமல்!!!!!????????
TN69Jun 29, 2026 - 10:02:51 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி மாநகர பேருந்து 'TN69' என்று மாத்தினா இன்னும் நல்லா இருக்கும், அல்லது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி ன்னு வந்தா டபுள் சந்தோசம்; தூத்துக்குடி மாநகராட்சி 20 வருசம் நெருங்கும் நிலையில் என்னதான் செய்கிறீர்களோ???!!!! இதனை முன்னெக்காமல்!!!!!????????
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)



GowthamJun 30, 2026 - 09:06:22 AM | Posted IP 172.7*****