» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)

கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (ஜூன் 17) தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவருக்குத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்துக் கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் (32) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று இவ்வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். குற்றவாளி கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 17,500/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


