» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

கடந்த 2023-ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2023-ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொந்தரவு அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த குற்றாலம் மகன் முருகானந்தன் (46) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று இவ்வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். குற்றவாளி முருகானந்தனுக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 15,000/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், இச்சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 8 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பிரீத்தா தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முருகானந்தன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


