» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)

தூய்மையான எரிபொருட்களின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஜெர்மனியின் H2Global நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் இந்தியத் துறைமுகம் என்ற பெருமையைத் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பெற்றுள்ளது.
துறைமுகத்தில் தூய்மையான கப்பல் எரிபொருட்களுக்கான 'இரட்டை ஏல முறை' அல்லது அதற்கு இணையான ஏல முறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்ட ஹைட்ரஜன் சார்ந்த எரிபொருட்களைச் சேமித்தல், கையாளுதல், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் இந்த ஒத்துழைப்பின் கீழ் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இக்கூட்டாண்மை இந்தியாவில் இருந்து ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குப் பசுமை எரிபொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும். இது, வரும் 2070-க்குள் இந்தியாவை 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' (Net Zero) நிலைக்குக் கொண்டு செல்லும் பிரதமரின் தொலைநோக்கு இலக்கிற்குப் பக்கபலமாய் அமையும்.
இந்தச் சர்வதேசக் கூட்டாண்மை புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதிச் சார்பைக் குறைத்து, நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், வ.உ.சி துறைமுகத்தைப் பசுமை எரிசக்தி ஏற்றுமதிக்கான உலகளாவிய முக்கிய மையமாக மாற்றும் எனத் துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


