» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்குக் கடும் எதிர்ப்பு : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனி 6, ஜூன் 2026 3:16:27 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ அதிமுகவிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் கவியரசு தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மூத்த பொறுப்புகளில் இருந்துவிட்டுத் திடீரெனத் கட்சி மாறிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூவுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு முழக்கங்களாக எழுப்பினர்.

மேலும், கயத்தார் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சி அலுவலகத்தில் கடம்பூர் ராஜூவின் புகைப்படம் மறைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரின் இந்த திடீர் விலகல் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


