» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டதால் நீண்ட கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி பொதுமக்கள் திருஷ்டி சுற்றி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 30-வது வார்டில் உள்ள முக்கிய வணிகப் பகுதியான பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே இந்த டாஸ்மாக் மதுபானக் கடை நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்தது. இக்கடையின் பெண் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், மதுப்பிரியர்களின் இடையூறுகளால் அப்பகுதியில் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன.
இதன் காரணமாக, இந்த மதுபானக் கடையை உடனடியாக இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், மதுபானக் கடையை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த முறைப்படி உத்தரவிட்டனர்.
அதன்படி, இன்று அக்கடை அங்கிருந்து முழுமையாக காலி செய்யப்பட்டு, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. தங்கள் பகுதியின் மிக முக்கியப் பிரச்சைனைக்குத் தீர்வு கிடைத்து, நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் சமூக ஆர்வலர் நடிகர் காசிலிங்கம் தலைமையில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் கடையின் முன்பு பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றித் திருஷ்டி சுற்றி தங்களின் மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)



ஏரியா மக்கள்Jun 5, 2026 - 10:29:07 PM | Posted IP 172.7*****