» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மக்களின் பிரச்னைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் - ஸ்ரீநாத் எம்எல்ஏ உறுதி!
திங்கள் 11, மே 2026 12:33:47 PM (IST)
தூத்துக்குடி மக்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கையில் எடுத்து அதை தீர்ப்பதற்கான வழியை கண்டு தீப்பதற்கான முயற்சிகள் செய்து சட்டப்படி முடிப்போம் என்று சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய நிகழ்வாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு தூத்துக்குடி மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீநாத் ஆகிய நான் பதவி ஏற்று கொண்டேன் அதற்காக தூத்துக்குடி வாழ் மக்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.என் வாழ்நாள் கிடைத்த மிக அரிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் வாழ்வுக்காக மேம்பாட்டுக்காக நிச்சயம் பாடுபடுவேன் என்பதை இந்த நேரத்திலே மீண்டும் கூறிக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்தல் மற்றும் சில பணிகள் இருப்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் தூத்துக்குடியில் வந்து நிரந்தரமாக தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் நன்றி அறிவிப்பு கூட்டம் முடிந்த பின்பு தூத்துக்குடி மக்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கையில் எடுத்து அதை தீர்ப்பதற்கான வழியை கண்டு தீப்பதற்கான முயற்சிகள் செய்து சட்டப்படி முடிப்போம். மக்கள் எப்பொழுதும் என்னை தொடர்பு கொள்ளும்படி வகையில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பேன் என்று கூறுகிறேன்.
மக்கள் அனைவருக்கும் தெரியும் இந்த இடைப்பட்ட காலம் எவ்வளவு இடைஞ்சலான காலமாக இருக்கும் என்று அதை புரிந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் நன்றி. தூத்துக்குடியில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளை தங்கள் தேவைகளை கூறுவதற்கு ஒரு மையப் புள்ளியாக தொலைபேசி எண்கள் மற்றும் அந்த வேலையை செய்வதற்கு என்னுடைய நேரடி பார்வையில் நபர்கள் அமர்த்தப்பட்டு எல்லா வார்டுகளிலும் தங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்
கூடிய விரைவில் அதற்குரிய கைபேசி எண் மற்றும் தொடர்பு கொள்ள ஈமெயில் அனைத்தும் பொது வழியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இனி தூத்துக்குடியில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியைக் குத்திக் கொன்று கணவன் தற்கொலை: மகன் கண்முன்னே கொடூரம்!
திங்கள் 25, மே 2026 5:00:14 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்: 339 மனுக்கள் குவிந்தன!
திங்கள் 25, மே 2026 4:09:48 PM (IST)

மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணி தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
திங்கள் 25, மே 2026 10:29:28 AM (IST)

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)



தூத்துக்குடிக்காரன்மே 12, 2026 - 11:02:49 AM | Posted IP 104.2*****