» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)
கோடைக்காலப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் சென்னை தாம்பரம் இடையே இரண்டு வாரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ரயில் இயக்கப்படும் நாட்கள்:
தூத்துக்குடி - தாம்பரம் (வண்டி எண்: 06018): ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27 (திங்கட்கிழமைகளில்) தூத்துக்குடியிலிருந்து புறப்படும்.
தாம்பரம் - தூத்துக்குடி (வண்டி எண்: 06017): ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 28 (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்திலிருந்து புறப்படும்.
வண்டி எண் 06018: தூத்துக்குடியில் இருந்து திங்கள் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்) மதியம் 12.30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும்.
வண்டி எண் 06017: தாம்பரத்தில் இருந்து செவ்வாய் மதியம் 03.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (புதன்) அதிகாலை 04.30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும்.
முக்கிய நிறுத்தங்கள்: இந்தச் சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 17 எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை மற்றும் திருமண விசேஷங்கள் காரணமாகப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்தச் சிறப்பு ரயில்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

