» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.  ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ். ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் 27 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ். ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் டி.டி. பிரவீன், கிள்ளியூர்  வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார், சங்கரன்கோவில் (தனி) சங்கமி கணேசன், அம்பாசமுத்திரம் வி.பி. துரை, நாங்குநேரி ரூபி மனோகரன் குளச்சல் டாக்டர் தாரகை கத்பர்ட் ஆகியோர் வேட்ளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி:  ஊர்வசி எஸ். அமிர்தராஜ் 

கல்வி மற்றும் குடும்ப பின்னணி: 42 வயதான ஊர்வசி அமிர்தராஜ், ஒரு உயர்கல்வி கற்ற அரசியல் தலைவராவார். இவர் B.Tech பட்டப்படிப்பை முடித்ததுடன், லண்டனில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவரது தந்தை மறைந்த செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் நளினி செல்வராஜ் ஒரு கல்வியாளர் ஆவார்.

தற்போதைய பொறுப்புகள்:

தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக விளங்கும் இவர், பின்வரும் பொறுப்புகளை வகித்து வருகிறார்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் (தமிழ்நாடு).

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

சட்டமன்ற விதிகள் குழு உறுப்பினர்.

கட்சிப் பதவிகள் மற்றும் வளர்ச்சி:

2009-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார்:

2013-2015: தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர்.

2015-2017: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவின் ஒருங்கிணைப்பாளர்.

2017: தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசி உறுப்பினர்.

2019-2022: தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்.

2021-2024: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: அரசியல் தவிர்த்து, 'ராஜம் குரூப் ஆஃப் கம்பெனிஸ்' நிறுவனத்தின் இயக்குநராகவும் இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெமிமா அமிர்தராஜ் (B.E, MBA) ஆவார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசியல் மற்றும் மக்கள் பணியாற்றி வருகிறார். 



காங்கிரஸ் முழு வேட்பாளர் பட்டியல் விவரம்:

பொன்னேரி (தனி) துரை சந்திரசேகர்

வேளச்சேரி ஜே.எம்.எச். ஆசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (தனி) கே. செல்வப்பெருந்தகை

சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம்

உத்தங்கரை (தனி) ஆர். குப்புசாமி

கிருஷ்ணகிரி டாக்டர் ஏ. செல்லக்குமார்

பென்னாகரம் ஜி.கே.எம். தமிழ்குமரன்

ஆத்தூர் (தனி) எஸ்.கே. அர்த்தநாரி

ஈரோடு (கிழக்கு) கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம் பி. ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம் கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்கநல்லூர் செல்வி வி. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (தனி) எம். விச்சு லெனின் பிரசாத்

கடலூர் ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி டி. ராமச்சந்திரன்

காரைக்குடி எஸ். மாங்குடி

உசிலம்பட்டி டி. சரவண குமார்

சிவகாசி கணேசன் அசோகன்

திருவாடானை ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம் எஸ். ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (தனி) சங்கமி கணேசன்

அம்பாசமுத்திரம் வி.பி. துரை

நாங்குநேரி ரூபி மனோகரன்

குளச்சல் டாக்டர் தாரகை கத்பர்ட்

விளவங்கோடு டி.டி. பிரவீன்

கிள்ளியூர் வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார்

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, புதிய முகங்களுக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory