» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

நெல்லையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் தலைமையில், வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அருகே பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சிவராம் ஓவியக் கலைக்கூடத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, 100 அடி நீள வெள்ளைத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
"வாக்களிப்பது நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை" என்ற வாசகங்களுடன், 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. திருநெல்வேலியின் பாரம்பரியச் சிறப்பான பத்தமடைப் பாயில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து கவனத்தை ஈர்த்தனர்.
தொடர்ந்து, வரையப்பட்ட ஓவியங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்தனர். பின்னர், அனைவரும் ஒன்றிணைந்து வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
நூறு கடந்த வாக்காளர்கள்:
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 107 வயதான செல்லம்மாள் மற்றும் 102 வயதான மேரி பாய் ஆகியோரின் இல்லங்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்றனர்.
அவர்களுக்குத் தேர்தல் நாள் அழைப்பிதழுடன், 'வாக்காளர் சீர்வரிசை' தட்டு மற்றும் விழிப்புணர்வுப் பதாகைகளை வழங்கி, ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதில் சமூக நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Coca Cola), 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: கன்னியாகுமரியில் பரபரப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 9:42:39 PM (IST)

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

