» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மனைவியுடன் தகராறு : சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:56:27 AM (IST)
நாசரேத் அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சமோசா வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்துள்ள அகப்பை குளம் கிராமம், 12-வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெயக்குமார் (59). சமோசா வியாபாரியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஜெயக்குமார் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.
ஜெயக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை அவர் மதுவிற்கே செலவழித்து வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயக்குமார், நேற்று தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் காவல் நிலையப் போலீசார், ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காய், கனிகளால் ஜொலிக்கும் தேர்தல் விழிப்புணர்வு: கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:06:12 PM (IST)

கோவில், வீடுகளில் திருட்டு: இருவர் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:37:15 AM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

