» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பராமரிப்புப் பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:37:23 AM (IST)

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற உள்ள தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை, ஹவுரா ரயில்களின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்

வண்டி எண் 16128: குருவாயூரில் இருந்து இன்று (ஏப்ரல் 3) முதல் 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், வழக்கமான பாதைக்கு மாற்றாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நிற்காத நிலையங்கள்: மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை.

கூடுதல் நிறுத்தங்கள்: அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை.

2. நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் 

வண்டி எண் 16352: நாகர்கோவிலில் இருந்து வரும் ஏப்ரல் 5, 9, 12, 16, 19, 20, 30 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். திண்டுக்கல் வழியாகச் செல்லாது. அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

3. கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் 

வண்டி எண் 12666: கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களுக்குச் செல்லாது. சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

4. கன்னியாகுமரி – ஐதராபாத் எக்ஸ்பிரஸ் 

வண்டி எண் 17070: ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகத் திருப்பி விடப்படும். கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழியாகச் செல்லாது.

5. தூத்துக்குடி – காச்சிகுடா எக்ஸ்பிரஸ் 

வண்டி எண் 17616: தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 7.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் நிலையங்களுக்குச் செல்லாது.

பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதம் மற்றும் சிரமங்களுக்குத் தெற்கு ரயில்வே வருத்தம் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இந்த மாற்றங்களுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory