» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!
வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் இந்தியாவின் முதல் துறைமுகமாக "துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 23.02.2026 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார. இந்திய கடல்சார் தொலைநோக்குப் பார்வை 2030 (Maritime India Vision 2030) மற்றும் அம்ரித் கால் விஷன் 2047 ஆகியவற்றின் கீழ், துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இணைய தொழில்நுட்பம் (IoT) சார்ந்த சென்சார்கள், ட்ரோன் படமெடுப்பு மற்றும் CCTV வலையமைப்புகள் மூலம் துறைமுக நிலவரங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்படும். சரக்கு கையாளும் உபகரணங்களின் பராமரிப்பை முன்கூட்டியே கணிக்கவும் (Predictive Maintenance), இயந்திரப் கோளாறுகளைத் தவிர்க்கவும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கப்பல் நகர்வுகள் மற்றும் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தி, கப்பல்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. துறைமுகத்திற்குள் கப்பல்கள் வந்து திரும்பும் நேரம் (Turnaround Time) 25 சதவீதம் வரை குறையும். ஆற்றல் பயன்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும். "What-if" மாதிரி மூலம் அதிக தேவையுள்ள நேரங்கள் மற்றும் செயல்பாட்டுத் தடைகளை முன்கூட்டியே கணித்துத் தயாராக முடியும்.
துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் இது குறித்துக் கூறுகையில், இந்த டிஜிட்டல் ட்வின் முயற்சி துறைமுகத்தின் நவீனமயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், இது வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச தரத்திலான அறிவார்ந்த (Smart Port) துறைமுகமாக மாற்றும். தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்: நாகர்கோவிலில் சலசலப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 5:31:45 PM (IST)

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)

