» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது : இயக்குநர் கௌதமன் பேட்டி

வெள்ளி 14, நவம்பர் 2025 8:07:01 AM (IST)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் கூறினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சம், கொலை, கொள்ளை தலை விரித்து ஆடுகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததில்லை.

எதிர்கால தலைமுறையை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல்களை திமுக மற்றும் அதிமுக செய்து வருகிறது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்பதே நேர்மையற்ற அறமற்ற நிலைப்பாடாகும். கர்நாடகத்தில் அணை கட்டப்பட்டால் 20 டிஎம்சி தண்ணீர் கூட தமிழகத்துக்கு வராது.

எஸ்ஐஆர் கடைசி நேரத்தில் கொண்டுவரப்படுவது சந்தேகத்துக்குரியது. இத்திட்டத்தின் மூலம் பிகாரில் அதிகளவில் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல உறவு உள்ளது. எனினும் வீழ்த்தப்படபோவது யார் என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது என்று கூறினார். 


மக்கள் கருத்து

srinivasanNov 15, 2025 - 11:43:24 AM | Posted IP 162.1*****

correct he is a duplicate man and anti indian he have no rights talk AIADMK

SOORIYANNov 14, 2025 - 12:36:10 PM | Posted IP 172.7*****

தமிழ்நாட்டில் யார் அரசியல் பேசுவது என்ற விவஸ்தை இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory