» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)

ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையில் கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ நபர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்துள்ளது இதனை வெள்ளிசந்தை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் என். ராமகிருஷ்ணன் பணிமுடிந்து வீடு திரும்பிய போது கவனித்துள்ளார். உடனடியாக அந்த மணி பர்சை மீட்டு சோதனை செய்ததில் ரூ22,000 மற்றும் ஏ.டி.எம் கார்டு, 2 பேன் கார்டு, ஆர்சி புக்,ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்துள்ளது.
உடனே பர்ஸில் இருந்த ஓட்டுநர் லைசன்ஸ் முகவரி நபரை தொடர்பு கொண்டு,நேரில் அழைத்து தவறவிட்ட மணிபர்ஸை வழங்கினார். மணி பர்ஸை தவறவிட்ட நபர் மற்றும் அவரது தாய் போலீசிடம் மணிபர்ஸை பெற்று கொண்டு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

குமரி மாவட்டத்தில் 91.74 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:02:22 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)


.gif)