» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செக் மோசடி வழக்கு: ஒலிபெருக்கி உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

வெள்ளி 14, நவம்பர் 2025 7:57:20 AM (IST)

செக் மோசடி வழக்கில் ஒலிபெருக்கி கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் விக்டர் மோகன்ராஜ். இவர், அதே பகுதியில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் ஒலிபெருக்கி கடை நடத்தி வரும் செல்வன் என்பவருக்கு பழக்கத்தின் காரணமாக அவர் வீடு வாங்கிய கடனை அடைக்கவும், குடும்பத் தேவைக்காகவும் கடந்த 2019இல் ரூ .2.85 லட்சம் கடனாக வழங்கியுள்ளார்.

கடனை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக செல்வன், அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியின் காசோலையை கொடுத்துள்ளார். விக்டர் மோகன்ராஜ், வங்கியில் காசோலையை செலுத்திய போது, செல்வன் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதனைத் தொடர்ந்து செல்வனிடம் பணத்தை திருப்பிக் கேட்ட போது, காலம் கடத்தியதாக தெரிகிறது. 

இதனால் விக்டர் மோகன்ராஜ் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தேவி ரக்க்ஷா, செக் மோசடியில் ஈடுபட்டதாக செல்வனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், வாங்கிய பணம் ரூ 2.85 லட்சத்தை 2 மாத காலத்திற்குள் கொடுக்காத பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Nov 14, 2025 - 08:12:04 AM | Posted IP 104.2*****

நல்ல நியாயமான தீர்ப்பு. வணக்கம் வாழ்த்துக்கள் 💐🙏💐

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory