» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

புதன் 12, நவம்பர் 2025 11:48:06 AM (IST)



தூத்துக்குடியில காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மில்லர் புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் சுமார் 10 சென்ட் காலி மனை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த இடத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதால் தூர்  நாற்றம் வீசுகிறது. 

மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் உடனடியாக இந்த காலி மனை உரிமையாளரிடம் அபராத தொகை வசூல் செய்து மாநகராட்சி மூலம் மணல் அடித்து தண்ணீரை தேங்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திள்ளனர். 


மக்கள் கருத்து

V.subramanianNov 12, 2025 - 01:18:35 PM | Posted IP 104.2*****

இதேபோல் எங்கள் தெருவில் ராஜகோபால் நகரில் 4வது தெருவில் உள்ளது அதையும் சரிசெய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

ஏரியா காரன்Nov 12, 2025 - 12:54:38 PM | Posted IP 162.1*****

பக்கத்தில மலை நீர் சேகரிப்பு மாதிரி கிணறுகள் காட்டினாள் எல்லாம் சரியாகிவிடும் செய்யுங்கடா மாநகராட்சி பயலுக எங்கேடா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory