» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

வடகிழக்கு பருவமழையினையொட்டி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் குளோரினேஷன் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரம் ஊராட்சிகளில் நீர்த்தொட்டிகளில் குளோரினேசன் செய்யபட்டுவதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவமழையினால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் வாய்ப்பு உள்ளதால் நீரினால் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரம் ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை, காலரா பாதிப்பு ஏற்படாமல் இருக்க முறையாக குளோரினேஷன் செய்ய வேண்டும் என்று குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் 33% குளோரின் செறிவூட்டப்பட்ட ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தி நீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் உள்ள தண்ணீரை குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் குழாய்களில் காணப்படும் கசிவுகளை போர்க்கால அடிப்படையை சரி செய்து கழிவு நீர் குடிநீரில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் குடிநீர்தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு குளோரினேஷன் செய்முறை பயிற்சி முறையாக அளிக்கப்பட வேண்டுமெனவும், ப்ளீச்சிங் பவுடரை காற்று வெயில், ஈரப்பதம் உள்ளிட்டவைகள் படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேல்நிலை தொட்டிகள் குளோரினேஷன் 2 பிபிஎம் அளவிலும், குழாய்களில் 0.2 முதல் 0.5 அளவீடு இருக்குமாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள், தரைமட்ட தொட்டிகளில் சேமிக்கப்படும் தண்ணீர் தூய்மையாக உள்ளதா, குளோரினேஷன் முறையாக செய்யப்படுகிறதா என, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் குளோரின் பவுடர் இருப்பு இருப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நீரினால் பரவும் நோய்கள் தாக்கமால் இருக்க பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.சீதா, வட்டா சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)


.gif)