» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!

செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கன்னியாகுமரியில் 85 சிசிடிவி கேமரா வசதி, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம் ஆகியவற்றை எஸ்பி ஆா். ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன புறக்காவல் நிலையம், 85 சிசிடிவி கேமரா வசதி, ஏஐ இயந்திரம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ் பெருமாள், அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நவீன ஏஐ இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலாப் பயணிகள் தகவல்களை பெறுவதும், அவசர சேவைகளை பயன்படுத்துவதும் சாத்தியமாகும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory