» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சனி 4, அக்டோபர் 2025 11:49:18 AM (IST)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலத்தில் பட்டம், பட்டயம் மற்றும் கலை மற்றும் அறிவியல் (B.A., B.Sc., B.Com) பட்டம் பெற்றவர்கள் 2025-2026- ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான இயந்திரவியல் (Mechanical) / ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E.), பட்டயம் (Diploma) மற்றும் கலை (B.A., B.Sc., B.Com etc.,) 2021, 2022, 2023, 2024 2025-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆன்லைனில் https://nats.education.gov.in 18.10.2025-க்குள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory