» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!

திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.10.2025) நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 280 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களிலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் விரைந்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வாகனங்களில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கும்போது டெங்கு காய்ச்சல் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி குளோரினேசன் கலந்து குடிநீர் வழங்கப்படும் குளோரினேசன் அளவினை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில், பொது இடங்களில் அதிகளவு குப்பைகள் சேராமல் சுகாதாரம் பேண வேண்டும். 

தூய்மை மிஷன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறும் தூய்மை பணியின் போது குப்பைகள் அகற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும். இவற்றினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் 4.5 மீட்டருக்கு கீழ் குறைவான மின்வாரிய ஒயர்களை உடனடியாக மாற்றி அமைக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே இதுகுறித்து மின்வாரிய அலுவலருக்கு தகவல் கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் கட்டணமின்றி மனுக்கள் எழுதி கொடுப்பதற்கான பிரிவு இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மைக்கேல் ஆன்டனி பெர்ணான்டோ, பத்மநாப புரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட சுற்றுசூழல் அலுவலர் பாரதி, உதவி ஆணையர் (ஆயம்) ஈஸ்வரநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா,மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்ம பிரியா, தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory