» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

ஞாயிறு 5, அக்டோபர் 2025 10:02:28 AM (IST)

திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory