» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!

சனி 27, செப்டம்பர் 2025 3:56:11 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சிகள் துறை சார்பில் கோதநல்லூர் மற்றும் களியக்காவிளை பேரூராட்சிகள் மற்றும் பேச்சிப்பாறை ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மேக்காமண்டபம் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.73 இலட்சம் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தினசரி மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டு, தற்போது வெள்ளையடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையமானது தரைத்தளம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களை கொண்டது. 

தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகம், 4 ஆண்கள் கழிப்பறை மற்றும் 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகம், 4 கடைகளும் 3 ஆண்கள் கழிப்பறைகளும், 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் மூன்று கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4063.29 சதுர மீட்டர் ஆகும். தற்போது பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறை அணையில் அமைந்துள்ள தானியங்கி மழை மானிகளில் பதிவாகியுள்ள மழை அளவுகளை பார்வையிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வுகளில் பத்மநாப புரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory