» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 10:26:20 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிமைப்பணிகள் தொகுதி - II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குருசடி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடிமைப் பணிகள் தொகுதி II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி - II பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. மேற்படி தேர்வில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் 9,982 நபர்கள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களில் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், Mobile Unit, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

