» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம்: ரூ.2.85 கோடி கடனுதவி வழங்கல்!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:19:40 PM (IST)



குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.2.85 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் 25.09.2025 அன்று நடைபெற்றது. மாவட்டத்தில் ஆறு கட்டமாக ஒன்பது வட்டார அலுவலகத்திற்கு உட்பட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. 

அதனடிப்படையில் முதல்கட்டமாக பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கோணத்தில் 10.09.2025 அன்று நடைபெற்றது. மேற்படி முகாமில் கல்லூரிகளிலிருந்து சுமார் 145 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமில் 28 மாணவ-மாணவிகள் PM வித்யாலட்சுமி இணையத்தளத்தில் கல்விக்கடன் விண்ணப்பம் செய்தார்கள். 12 வங்கிகளிலிருந்து வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டு ரூ.1.42 கோடி அளவில் கடன் ஆணை வழங்கப்பட்டது.

இரண்டவது கல்விக்கடன் மேளா கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் 18.09.2025 அன்று நடைபெற்றது. முகாமில் 10 கல்லூரிகளிலிருந்து சுமார் 136 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமில் 50 மாணவ-மாணவிகள் PM வித்யாலட்சுமி இணையத்தளத்தில் கல்விக்கடன் விண்ணப்பம் செய்தார்கள். 17 வங்கிகளிலிருந்து வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டு ரூ.1.87 கோடி அளவில் கடன் ஆணை வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது கல்விக்கடன் மேளா 25.09.2025 அன்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த கல்விக்கடன் மேளாவில் நடைபெற்றது மேளாவை கல்லூரி முதல்வர் முனைவர்.பிஜி தொடங்கி வைத்தார்கள். கல்வியின் முக்கியத்துவம் கல்விக்கடன் பெறுவதின் அவசியம் நாம் வங்கியை தேடிச்சென்ற காலம் போய் வங்கிகள் நம்மைத்தேடிவந்து கல்விக்கடன் வழங்க முன்வந்துள்ளது. 

எனவே மாணவ மாணவிகள் இந்த முகாமை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முகாமில் 10 கல்லூரிகளிலிருந்து சுமார் 72 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமில் 35 மாணவிகள் PM மாணவ-கல்விக்கடன் வித்யாலட்சுமி இணையத்தளத்தில் விண்ணப்பம் செய்தார்கள். 15 வங்கிகளிலிருந்து வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டு ரூ.2.85 கோடி மதிப்பில் கடன் ஆணை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நான்காவது கல்விக்கடன் மேளா 10.10.2025 அன்று சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த கல்விக்கடன் மேளாவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியியல் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் முனைவர்.பிஜி, துறை அலுவலர்கள், வங்கியாளர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory