» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:58:43 PM (IST)

அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் வருகை பதிவு செய்யும் பிரிவு, பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து பார்வையிட்டு விவரங்களை செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்று பிரத்தியேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வருகை தந்த கர்ப்பிணி தாய்மார்களுடன் கலந்துரையாடி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக குளிர்சாதன வசதி, 24 மணி நேரமும் வெந்நீர் வசதி, பிரசவ பகுதியில் ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையேயும் திரைச்சீலை மறைப்பு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பிரசவத்தினை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டுமென கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)
