» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
திங்கள் 8, செப்டம்பர் 2025 11:22:35 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இராஜக்கமங்கலம் உள் விளையாட்டு அரங்கத்தில் தெரிவிக்கையில்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 2025-2026ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் அனைவருடைய விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வருவதேயாகும்.
அதன் ஒருபகுதியாக இன்றையதினம் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி விளையாட்டுப்போட்டிகளை இராஜக்கமங்கலம் உள் விளையாட்டு அரங்கத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் வினு, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)
