» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர்களின் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு மாதம் ஆகும். மேலும் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
