» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:04:52 AM (IST)

கோணம் அறிவு சார் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணம் அறிவுசார் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான்முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பற்ற மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நான் முதல்வன் /பினிஷிங் ஸ்கூல் (வெற்றி நிச்சயம்), தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வாயிலாக தனியார் மற்றும் அரசு பயிற்சி வழங்குநர்கள் மூலம் வேலைவாய்ப்பு சார்ந்த, தரமான திறன் பயிற்சியை குறுகிய கால பயிற்சியாக வழங்கப்படவுள்ளது.
அதன டிபடையில் நான் முதல்வன் /பினிஷிங் ஸ்கூல் திட்டத்தில் ஜெர்மன் மொழி நிபுணர்களை கொண்டு செவிலியர் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி இன்று முதல் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோணம் அறிவுசார் மையத்தில் துவங்கப்பட்டுள்ளது. இங்கு வந்துள்ள அனைத்து செவிலிய மாணவர்களையும் பாராட்டுகிறேன்.
மேலும் ஒவ்வொரு வரும் இரண்டிற்கு மேற்பட்ட மொழியை அறிந்திருந்தால் உலகளாவிய நிறுவனங்கள், சர்வதேச தொழில் வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் நேரடி வேலைவாய்ப்பு வழியை வழங்குகிறது. நவீன சர்வதேச வேலைச் சந்தையில் ஒரு வெளிநாட்டு மொழியை அறிவது நிச்சயமாக வேலைவாய்ப்பை வழங்கும். உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் மொழிகளில் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்களை தேர்ந்தெடுக்கின்றனர். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கு பிற மொழிகள் தேவை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு 18 முதல் 35 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி நர்சிங் முடித்து 2 வருட அனுபவத்துடன் அல்லது பொது நர்சிங் மற்றும் மருத்துவம் முடித்து 3 வருட அனுபவத்துடன் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட செவிலியர் இப்பயிற்சியை பெற்று உடன் வேலைக்கு செல்லலாம். இந்த செவிலியர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு படிப்பிற்கான பயிற்சி காலம் 6 மாதங்கள் ஆகும். இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு அரசு மூலம் ஜெர்மன் நாட்டில் நல்ல சம்பாளத்தில் வேலைவாய்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இந்த பயிற்சியின் முடிவில் இளைஞர்கள் ஜெர்மன் மொழி சரளமாகப் பேச, கேட்க மற்றும் எழுத முடியும். மருத்துவம் சம்பந்தமான சொற்கள் ஜெர்மன் மொழியில் கற்பிக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை பெற்றடையலாம். வேலைவாய்ப்புக்கான உத்திரவாதத்துடன் இந்த பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகர் நலஅலுவலர் ஆல்பர் மதியரசு, பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள், செவிலிய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
