» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேசிய கைத்தறி தின விழாவில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:26:52 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறை சார்பில் 11-வது தேசிய கைத்தறி தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று (07.08.2025) நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, கண்காட்சியினை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில் "இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் கைத்தறி தொழில் 1000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்கதும், நெசவாளர்களின் மிகச்சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டதாகும்.
கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தும் பொருட்டும். அவர்களின் பெருமையை பறைசாற்றவும் தேசிய கைத்தறி தினவிழா இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் நெசவாளர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கைத்தறி என்பது பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழிலாகும். கைத்தறி வாயிலாக சேலைகள், போர்வை, துண்டு உள்ளிட்ட பல்வேறு வகையிலான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து முத்ரா திட்டத்தின் கீழ் 40 நெசவாளர்களுக்கு ரூ. 20 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடன் தொகையும், நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 19 நெசவாளர்களுக்கு ரூ.15.65 மதிப்பில் ஊக்கத்தொகையும், 1 நெசவாளர்க்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையும், 70 வயதிற்கு மேல் நெசவு தொழில்புரியும் மூத்த நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் 5 நெசவாளர்களுக்கு மூத்த நெசவாளர்கள் விருதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திறன்மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கோவில் நகைகள் செய்யும் பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாணிக்கமாலை செய்யும் பயிற்சிகள் நமது மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதுப்போன்று நெசவாளர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தி, அதிக வருமானம் ஈட்டுவதற்கு தங்களில் விரும்பம் உள்ளவர்கள், தங்களின் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை இணைத்து 30 முதல் 40 நபர்கள் சேர்ந்து கைத்தறி துணிகளில் ஆரி பயிற்சி, கை வேலைப்பாடுகள், எம்பிராய்டரி வேலைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன்மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பாடுவதோடு, தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே விரும்பமுள்ள நெசவாளர்கள் உதவி இயக்குநர் கைத்தறி அவர்களிடம் தெரிவித்து, இப்பயிற்சிகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் கைத்தறி ஜெயசுதா, முன்னோடி வங்கி உதவி அலுவலர் கார்த்திக், கைத்தறி அலுவலர் இராம்கண்ணன், அலுவலர்கள், நெசவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலங்கரையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
சனி 6, செப்டம்பர் 2025 4:13:24 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

நாட்டில் அமைதி நிலைத்து, ஒற்றுமை மலரட்டும்: விஜய் வசந்த் எம்.பி., வாழ்த்து!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை: செப்.6ல் ஆட்கள் தேர்வு!
புதன் 3, செப்டம்பர் 2025 12:22:36 PM (IST)

தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரியிலிருந்து மதுரை, தி.மலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:17:02 AM (IST)
