» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
திங்கள் 28, ஜூலை 2025 5:48:32 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சியில் நாளை (ஜூலை 29) செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு 15.07.2025 முதல் 26.07.2025 வரை 48 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை (ஜூலை 29) செவ்வாய்க்கிழமை 6 முகாம்கள் நடைபெற உள்ளது.அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 28 & 29 A.S. தங்கவேல் மண்டபம்,வடிவீஸ்வரம்
கிள்ளியூர்: பாலபள்ளம் பேரூராட்சி CSI சேகர சபை சமூக நலக்கூடம், மத்திக்கோடு
விளவங்கோடு: மேல்புறம் - தேவிகோடு சி. எஸ் . ஐ .குட்டைக்கோடு நூற்றாண்டு அரங்கம்
திருவட்டார்: திருவட்டார் - கண்ணணூர் CSI சமுக நலக்கூடம், கண்ணனூர்
கல்குளம்: குருந்தன்கோடு - வெள்ளிச்சந்தை பத்மநாபா மண்டபம், வெள்ளிச்சந்தை
தோவாளை: தோவாளை - செண்பகராமன்புதூர் விக்னேஷ் திருமண மகால்
செண்பகராமன்புதூர்
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான் விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.எனவே, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 29.07.2025 அன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)


