» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் பேரிகார்டால் விபத்து அபாயம் : உடனடியாக அகற்றிட சிபிஎம் கோரிக்கை!

செவ்வாய் 1, ஜூலை 2025 4:15:43 PM (IST)



தூத்துக்குடி கடற்கரை சாலையில் ரோச் பூங்கா அருகே சாலையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி நகரின் தொழில் வளர்ச்சிக்கு துறைமுகம் முக்கியமானதாகும். அனல்மின் நிலையம், NTPL அனல்மின் நிலையம், ஷிப்பிங் நிறுனங்கள் துறைமுக வளாக பகுதியில் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

துறைமுக வளாகத்தில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் கடற்சாலை பெரிதும் பயன்படுத்துகின்றனர். மேலும் ரோச் பார்க், மற்றும் துறைமுகம் கடற்கரை செல்லும் பொதுமக்கள் கடற்கரை சாலை வழியாகத் தான் நகரில் இருந்து செல்வார்கள். இது தவிர தொழிலாளர்கள் 3 ஷிப்ட்களிலும் பணியாற்றுவார்கள்.  இதனால் இரவில் பணிக்கு செல்வதும் பணியில் இருந்து திரும்புவதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் கடற்கரை சாலை இதற்கு உகந்ததாக இல்லை. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் தேவைகேற்ப தெரு விளக்கு இல்லாததால் போதிய வெளிச்சம் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் காவல் துறை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலையின் குறுக்கே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோச் பார்க் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், சமீப காலமாக விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.

தற்போது கடற்கரை சாலையை பயன்படுத்த பொதுமக்களும் தொழிலாளர்களும் அச்சப்படும் நிலை உள்ளது. இதற்கு உயரமான தடுப்பு வேலி தான் காரணம் எனக் கருதப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் இவ்விஷயத்தில் தலையிட்டு ரோச் பார்க் அருகே உள்ள தடுப்பு வேலியை அகற்றமும் குண்டும் குழியுமாய் உள்ள சாலையை சீர்படுத்தவும், தெரு விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

SELVA RAJALINGAMJul 2, 2025 - 11:04:45 AM | Posted IP 104.2*****

வாகன வேகத்தை குறைக்கவும், ரேசில் ஈடுபடாமல் தடுக்கவும் பேரி கேட் அவசியம்

தமிழன்Jul 2, 2025 - 11:02:09 AM | Posted IP 162.1*****

வேகம் குறைப்பதற்கு தான் அந்த பேரி கார்டு, பக்கத்தில் இனிகோ நகரில் இருந்து வரும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

ArunJul 1, 2025 - 09:18:04 PM | Posted IP 172.7*****

பேரிகேட் கண்டிப்பாக வேண்டும் புள்ளிங்கோ தொல்லை தாங்க முடியவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory