» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!

புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ஆம் தேதி மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டுள்ளது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னையைச் சார்ந்த 3 நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் அந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமின் முன்பதிவு இணையவாயிலாக https://bit.ly/NCRJ2025 என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

Shivani kmJun 27, 2025 - 11:07:56 AM | Posted IP 104.2*****

It was good opportunity to seek a job for freshers

Shivani kmJun 27, 2025 - 11:07:10 AM | Posted IP 172.7*****

It was good opportunity to seek a job for freshers

R.RamyaJun 26, 2025 - 12:06:35 AM | Posted IP 172.7*****

Search job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory