» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சிவப்பு சாத்தி நடராஜப் பெருமான் ரத வீதி உலா!
புதன் 7, மே 2025 10:00:10 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 7ஆம் நாளான இன்று மாலை நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7ஆம் நாளான இன்று காலை 7.35 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் உருகு சட்ட சேவை, 8.00 மணிக்கு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் ரத வீதி உலா நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமான் கும்பாபிஷேகம், 10.30மணிக்கு நடராஜப் பெருமான் மாடவீதி சுற்றி தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் கோயில் விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவு 7.00 மணிக்கு சிகப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளினர். பின்னர் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்கப் பல்லக்கில் அருள்மிகு சோமாஸ்கந்தர் - பாகம்பிரியாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)


Rajaமே 8, 2025 - 03:27:51 PM | Posted IP 104.2*****