» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சனி 12, ஏப்ரல் 2025 12:21:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் காலியாகவுள்ள 99 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 99 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன.

வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 - ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

பழங்குடியினருக்கு 18 வயது முதல் 40 வயதுக்கு மிகாமலும், விதவை (ம) கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு மிகாமலும் விண்ணப்பிக்க தகுதியானாவர்கள். வயது மற்றும் இதர தகுதிகளின் நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி-குக்கிராமம்-வருவாய்கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை) சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு தோல்வி/தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை எண்.32 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்(சந4-2) துறை, நாள்: 12.03.2025-ன்படி முன்னுரிமை வழங்கப்படும். குறைவான பார்வைத்திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது), உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40மூ கைகளின் முழு செயல்பாட்டுதின், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான)

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.04.2025 வரை பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடசான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்படவேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும், நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முக தேர்விற்கு அழைப்பாணை அனுப்பும் போது நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. மாதிரி விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை https://kanniyakumari.nic.in என்ற கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு எந்த விண்ணப்பங்களும் பெறப்படமாட்டாது. காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கு/திரும்ப பெறுவதற்கு/திருத்துவதற்கு/கெடு தேதியினை நீட்டிப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு முழு உரிமையுண்டு. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory