» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டார் விளையாட்டு மையம்: தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி 12, ஏப்ரல் 2025 12:12:44 PM (IST)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குமரி மாவட்டத்தில் தற்காப்பு கலை  பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில்" தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர் வீராங்கனைகளை தேசிய (ம) சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சமவாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை செயல்படுத்தும் விதமாக இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின்கீழ் தற்காப்பு கலையானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் 11/04/2025 முதல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் .பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20/04/2025 மாலை 5.00 மணி ஆகும் . விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு (ம) உடற்தகுதித் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும் நாள் 25/04/2025 ஆகும். நேர்முகத்தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 

இது நிரந்தரப்பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703507 / 04652 262060 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory