» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:47:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாஅறிவித்துள்ளார். 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020 கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் / வழிவலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுத்தோறும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் (2025) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன்படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில் / வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

மீன்பிடி தடைக்காலத்தில் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory