» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை அறிவிக்க பக்தர்கள் கோரிக்கை!

புதன் 2, ஏப்ரல் 2025 5:46:08 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பங்குனி உத்திரத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தென் மாவட்டங்களில் இந்துக்கள் அனைவரும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். 

இதற்காக ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

Santhosh KumarApr 2, 2025 - 09:59:29 PM | Posted IP 162.1*****

அண்டை மாவட்டம் திருநெல்வேலி யில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விடுமுறை கிடையாது.

தமிழன்Apr 2, 2025 - 07:37:50 PM | Posted IP 172.7*****

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இந்து மத மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கு பங்குனி உத்திர திருநாள் மிகவும் முக்கியமான சிறப்பான நாள். அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அளிக்கலாம்.குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகமான குலதெய்வங்கள் உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory