» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கூட்டுறவு பண்டகச்சாலை குடோனில் ஆட்சியர் திடீர் ஆய்வு

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:26:14 PM (IST)



ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகச்சாலை கிட்டங்கியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரல்வாய்மொழி கூட்டுறவு உணவு கிட்டங்கியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (01.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்படும் உணவு தானியங்களை இருப்பு வைக்க கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு உணவு கிட்டங்கிகள் செயல்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக ஆரல்வாய்மொழி உணவு கிட்டங்கியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கிட்டங்கியின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குகேற்ப ஒரு மாத பொருட்களான அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களாக அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இருப்பு பதிவேடுகள், ஊழியர்களின் வருகைப் பதிவேடு, கிட்டங்கியின் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்பட்டது.

மேலும் கிட்டங்கியிலிருந்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் சமச்சீர் செய்து அந்தந்த மாத கலர் நூல் கொண்டு தைத்தும் தொய்வின்றி அனுப்பும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் கூட்டுறவு இணைப் பதிவாளர் சிவகாமி, தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள் வழங்கல்), துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory