» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!

வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)



கோதையாறு இடதுகரை கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி அனை திறப்பிற்கு முன்பாக நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை அணையின் மூலம் தண்ணீர் வசதி பெறும் கோதையாறு இடதுகரை கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நெடுகை நீளம் 9,800 மீட்டரில் 35 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

மேற்படி தளத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியாக ரூ.32 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அணை திறப்பதற்கு முன்பாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியினை செருப்பாலூர் உதவி செயற்பொறியாளர் மா.மூர்த்தி ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory