» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுரா கோட்ஸ் நிறுவனம் மோசடி: வேலையிழந்த தொழிலாளர்கள் எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார்!

புதன் 2, ஏப்ரல் 2025 4:22:24 PM (IST)



தூத்துக்குடியில் தொழிலாளர்களை ஏமாற்றி மோசடி செய்த மதுரா கோட்ஸ் மேலாளர் மற்றும் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலை இழந்த தொழிலாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் 1880 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூற்பாலை ஆனது மதுரா கோட்ஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனமானது மதுரை மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய இடங்களில் நல்ல லாபத்துடன் இயங்கி வந்த நிலையில் தூத்துக்குடியில் இயங்கி வந்த நிறுவனம் மட்டும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி நிறுவனத்தை மூட மதுரா கோட்ஸ் நிர்வாகம் முடிவு எடுத்தது.

இந்த நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சியும் தூத்துக்குடியின் தொழிலாளர்கள் உடைய முன்னேற்றமும் அபரீதமாக இருந்தது என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரிந்த உண்மை. 144 ஆண்டுகளாக தொழிலாளர்களின் உழைப்பால் உயர்ந்த உன்னத நிலைக்கு வந்த இந்த ஆலையானது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த ஆண்டு இறுதியில் மதுரா கோட்ஸ் நிறுவனம் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாய விருப்ப ஒய்வில் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஆலையின் சார்பில் வருடத்திற்கு 30 நாட்கள் கிராஜுவெட்டி பணம் சர்வீஸ் அடிப்படையில் தரப்படும் என்றும் பணி ஓய்வு பெறும் நாள் வரையிலான சம்பளத் தொகை கணக்கிட்டு ஓரிரு நாட்களில் தொழிலாளர்கள் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்றும் மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் என்ற பாலு உறுதி அளித்துள்ளார்.

மேலும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தங்களை மிரட்டி கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தைகளை கூறி போய் ஆவணங்களில் கையெழுத்தும் வாங்கியதாகவும் ஆனால் உறுதி அளித்ததற்கு மாறாக தொழிலாளர்கள் வங்கி கணக்கில் சொற்பணம் மட்டுமே வரவு செய்யப்பட்டு மீதி பணத்தை கேட்க சென்ற போது ஆலையின் மேலாளர் பாலசுப்ரமணியம் என்ற பாலு தொழிலாளர்களை சந்திக்க விடாமல் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து மிரட்டியதாகவும் மேலும் ஆலையில் இருந்த உதிரி பாகங்களையும் கழட்டி எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். இது குறித்து வடபாகம் காவல் நிலையத்திலும் தொழிலாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட்டாட்சியர் தலைமையில் தொழிலாளர்களுக்கும் மதுரா கோட்ஸ் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் சுமுக முடிவு எடுக்கப்படவில்லை இந்த நிலையில் இன்று மதுரா கோட்ஸ் நிர்வாகத்தால் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய பணப்பலன் எதுவும் தராமல் தங்களை ஏமாற்றிய மதுரா கோட்ஸ் நிர்வாகத்தினர் மீதும் மேலாளர் பாலு என்ற பாலசுப்பிரமணியம் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க வந்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து

விவசாயத்தை காப்போம்Apr 2, 2025 - 06:47:43 PM | Posted IP 162.1*****

ஏன் மூடியது காரணம்? முக்கிய விவசாயம் அழிவு இலவம் பஞ்சு உற்பத்தி குறைவு தான் முக்கிய காரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory