» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது!
புதன் 2, ஏப்ரல் 2025 10:51:07 AM (IST)

சென்னையில் அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது வழங்கப்பட்டது.
சென்னை அரக்கோணத்தில் அருந்தமிழ்ச்சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பெண் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சாதனைப் பெண்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி ஜின்பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இவரது தமிழ் பற்றைப் பாராட்டி தொலைக்காட்சி பட்டிமன்ற பேச்சாளர் ஜெகதீஸ்வரி இவருக்கு அருந்தமிழ் தாரகை விருது வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருந்தமிழ் சங்க நிறுவனர் கேத்தரின் மெட்டில்டா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)

கூட்டுறவு பண்டகச்சாலை குடோனில் ஆட்சியர் திடீர் ஆய்வு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:26:14 PM (IST)

R.irudhya Agnes MysticaApr 3, 2025 - 10:08:25 AM | Posted IP 162.1*****