» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் நகை அபேஸ்: 4 பெண்கள் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:19:41 PM (IST)
ராஜாக்கமங்கலம் அருகே எல்.ஐ.சி. முகவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் நகையை திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தற்போது எல்.ஐ.சி. முகவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து மதுரை சேர்ந்த முருகேஸ்வரி (30)என்ற பெண் எல்.ஐ.சி. முகவரை தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.
அத்துடன் குடும்பத்தினருடன் நேரில் பார்க்க வர உள்ளதாக கூறினார். அதற்கு எல்.ஐ.சி. முகவரும் சம்மதம் தெரிவிக்க, தனது முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி (28)மற்றும் முத்துலட்சுமி (45), போதும் பொண்ணு (43) ஆகிய 4 பேரும் எல்.ஐ.சி. முகவர் வீட்டிற்கு வந்தனர். அங்கு எல்.ஐ.சி. முகவருடன் உறவினர்கள் இருந்தனர். அப்போது 2-வது திருமணம் செய்ய சம்மதித்தால், அந்த பெண்ணுக்கு கொடுக்க இருக்கும் தங்க வளையல்கள், மோதிரம் என 8 பவுன் நகைகளை எல்.ஐ.சி. முகவர் காண்பித்தார். இதனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் உன்னிப்பாக கவனித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த நகைகளை அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்து விட்டு வந்தவர்களை உபசரிப்பதில் எல்.ஐ.சி. முகவர் தீவிரமாக இருந்தார். மாப்பிள்ளை பார்க்க வந்த 4 பெண்களும் காலையில் இருந்து இரவு 9 மணி வரை அங்கேயே இருந்து விட்டு சென்றனர். ஆனால் மறுநாள் எல்.ஐ.சி. முகவர் மேஜையில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன் மற்றும் மகளிடம் தெரிவித்தார்.
ஒருவேளை, மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் திருடியிருப்பார்களோ என்ற சந்தேகம் எல்.ஐ.சி. முகவருக்கு ஏற்பட்டது. உடனே அவர் முருகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு முருகேஸ்வரியுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கு போன் செய்து கேட்டபோது, உங்களை அவளுக்கு பிடிக்கவில்லை, இதனால் அவள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றார். அத்துடன் மாயமான நகைகள் குறித்து கேட்ட போது சரியான பதில் கூறவில்லை.
இதுகுறித்து எல்.ஐ.சி. முகவர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சேர்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் தான் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளனா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாப்பிள்ளை பார்க்க வந்ததை போல் நடித்து நகைகளை பெண்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
