» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி திட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 14, மார்ச் 2025 5:18:44 PM (IST)
தமிழ்நாடு அரசால் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற "நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி (NS-NOP)" என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது. இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை "நம்ம ஸ்கூல் (NS-NOP)" இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NS-NOP)” என்ற பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பின்னர் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான உதவியினை பணமாகவோ அல்லது அவர்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில் மடி கணினி வழங்கியோ பங்களிப்பாளர்களால் நிறைவேற்ற முடியும், ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும் அந்தந்த பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மற்றும் தலைமை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்ட பின்னரே (NS-NOP)" தளத்தில் பதிவேற்றப்படும். (NS-NOP)" இணைய தளத்தில் நன்கொடையாளர்களுக்கென பிரத்தியேகமான Dash Board வழங்கப்படும்.
இந்த Dash Board வாயிலாக பங்களிப்பாளர்கள் தங்களது பங்களிப்பின் பயன்பாட்டை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும், மற்றும் பங்களிப்பாளர்களுக்கு கல்வித்துறையினால் வழங்கப்பட்ட பயனீட்டு சான்றிதழ், வரிவிலக்கு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், மேலும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்கப்படும்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைந்து பங்களிக்குமாறும் பொதுமக்கள் https://nammaschool.tnschools.gov.in/#/ அல்லது 6385313047 என்ற தொலைபேசி எண்ணின் வாயிலாக நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி குழுவை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

சுசீந்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:17:29 PM (IST)

தங்க நகை கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதி ஏழைகள் நலனுக்கு எதிரானது: விஜய் வசந்த்
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:14:23 PM (IST)

கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
